Safety Tips
பாதுகாப்பு குறிப்புகள்
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள் உரையாடல் வடிவில்
பாதுகாப்பு குறிப்புகள்
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள் உரையாடல் வடிவில்
“உங்களின் தகவலை கேட்கும் எந்த போன் கால்களிலும் / மின்னஞ்சல்களிலும் பணம் சம்பந்தமாகவும் அல்லது, தனிப்பட்ட தகவலைக் கேட்கும் நபர்களைப் பற்றி நாங்கள் எச்சரிக்கின்றோம்.”
உங்கள் தொடர்புக்கு எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் நீங்கள் ஆர்வமுள்ள அந்த நபரை அறிந்துகொள்ள உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வங்கி கணக்கு தகவல்கள் , இணையவழி இணைப்புகள் ( Online Links ) மற்றும் ஒரு முறைக்கடவு சொல் / எண் ( OTP ) போன்ற தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம். தேவையற்ற கேள்விகளைக் கேட்கும் நபர்களிடம், அவர்களின் பதில்களைப் பற்றி தெளிவாகக் கவனியுங்கள்.
நபர் நன்கு அறியாதவரை தனியாக சந்திக்காதீர்கள். நீங்கள் முதல் முறையாக சந்தித்தால், கோவில், காபி கடைகள் போன்ற பொது இடங்களில் சந்திக்கவும், ஹோட்டல் அறைகள் அல்லது எந்தவொரு தனிப்பட்ட இடத்திலும் சந்திப்பதை தவிர்க்கவும். நீங்கள் முதல் சந்திப்பை தொடங்கும் முன் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு தகவல் சொல்லுங்கள்.
வெளிநபர் பணம் கேட்கும் போது, நீங்கள் ஒரு பண மோசடியை எளிதாக அடையாளம் காண முடியும். அத்தகைய நபரிடம் ஜாக்கிரதையுடன், உங்களின் எந்தஒரு நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை சொல்லாமலும், மேலும் அந்த நபரிடம், வாக்குவாதம் மற்றும் பிரச்சினைகள் எதையும் செலுத்த வேண்டாம். நீங்கள் சந்திக்கும், எவரிடமும் நிதி விஷயங்களைப் பற்றி ஒருபோதும் விவாதிக்காதீர்கள். இது மிகவும் பாதுகாப்பற்றது.
உறுப்பினரின் கவனத்திற்கு, மற்ற திருமண தகவல் மையங்களில், தங்கள் முகவரிக்கு, பொருத்தமான ஜாதகங்கள் POSTAL – தபாலில் அனுப்பி பணம் பெற முயற்சிப்பார்கள். அவர்களிடம் ஏமாற வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திருமணம் என்பது இரண்டு குடும்பங்களின் ஒரு சங்கமம் , மற்றும் இரண்டு பேர் மட்டும் ஒன்று சேரும் ஒரு நிகழ்வு அல்ல. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உங்கள் நடவடிக்கைகளைத் தெரிவிக்கவும், மேலும் , முடிவெடுப்பதில் குடும்பத்தினர் அனைவரின் பங்கும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள் , இது உங்கள் குடும்பத்தில் நல்ல பிணைப்பையும் , பாதுகாப்பையும் அதிகரிக்கும். எனவே, உங்களுக்கு வரும் அழைப்புகளை, நிதானமாகவும், பொறுமையுடனும், மேலும், உங்களின் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்புடன் கையாளவும், இதனால் அனைத்தும் நன்மையுடன் அமையும்.
திருமணம் செய்துகொள்வது ஒரு வாழ்நாள் முடிவாகும், உங்களை விட உங்களுக்கு எது சிறந்தது என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது, எனவே உங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பது உங்கள் பொறுப்பாகும்.
எனவே, இதில் நாங்கள், பங்குகொள்கின்றோம், . . .
உங்களின் பாதுகாப்பு , உங்கள் பொறுப்பு.
உங்களின் முகவரியையோ அல்லது தனிப்பட்ட சொத்து பற்றிய முழு விவரங்களையோ நாங்கள் கேட்பதில்லை.
உங்களின் தகவல் உங்களிடம் பாதுகாப்பாக இருக்கின்றது. எனவே , இதனால், உங்களின் தனிப்பட்ட தகவல், நூறு சதவீதம் உங்களாலேயே பாதுகாக்கப்படுகின்றது.
மேலும்,
திருமணம் சம்பந்தமாக வரும் அழைப்புகளில், உங்கள் தகவல்களை வெளிப்படுத்துவதற்கு முன், குடும்பத்தினருடன் ஆலோசித்து, மிகுந்த முன் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
எனவே, இதில் நாங்கள், பங்குகொள்கின்றோம், . . .
உங்களின் பாதுகாப்பு , உங்கள் பொறுப்பு.
உங்களின் முகவரியையோ அல்லது தனிப்பட்ட சொத்து பற்றிய முழு விவரங்களையோ நாங்கள் கேட்பதில்லை.
உங்களின் தகவல் உங்களிடம் பாதுகாப்பாக இருக்கின்றது. எனவே , இதனால், உங்களின் தனிப்பட்ட தகவல், நூறு சதவீதம் உங்களாலேயே பாதுகாக்கப்படுகின்றது.
மேலும்,
திருமணம் சம்பந்தமாக வரும் அழைப்புகளில், உங்கள் தகவல்களை வெளிப்படுத்துவதற்கு முன், குடும்பத்தினருடன் ஆலோசித்து, மிகுந்த முன் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.